×

சர்ச்சை கருத்துகளை டிவிட்டரில் பதிவிட்ட வழக்கு; பாஜ பிரமுகர் கல்யாணராமனின் ஜாமீன் மனு தள்ளுபடி: குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதால் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  பாஜவை சேர்ந்த கல்யாணராமன் டிவிட்டரில் தொடர்ச்சியாக வெவ்வேறு மதங்களை சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வு, மோதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு வருவதாக சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது பதிவான வழக்கில், அக்டோபர் 16ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, தனக்கு ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யபட்டது. இதையடுத்து, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் வழங்க புகார்தாரர் கோபிநாத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் கல்யாணராமனை குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் ஆஜரான மாநகர அரசு வக்கீல் ஜி.தேவராஜன் தெரிவித்தார். இவற்றை பதிவு செய்த நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : Twitter ,Bajaj Pramukar Kalyanaraman ,Sessions , The case of posting controversial comments on Twitter; Bajaj Pramukar Kalyanaraman's bail plea dismissed: Sessions court orders closure
× RELATED சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி