புதுச்சேரியில் நவ.8ம் தேதி பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று அளித்த பேட்டி: புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் செப்டம்பர் மாதத்தில் பள்ளி திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்புகள் வரை நடந்து வருகின்றன. தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால் 1 முதல் 8ம் வகுப்புகள் வரை நவம்பர் 8ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரம் 6 நாட்கள் அரைநாள் மட்டும் அதாவது காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணிவரை பள்ளிகள் இயங்கும். இதில் 1,  3, 5, 7ம் வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இயங்கும். 2, 4,  6, 8ம் வகுப்புகள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் நடக்கும் என்றார்.

Related Stories:

More