டிரான்சில்வேனியா டென்னிஸ் 2வது சுற்றில் ஜாக்குலின், ரடுகானு

க்ளூஜ்-நபோகா: ருமேனியாவில் உள்ள க்ளூஜ்-நபோகா நகரில்  டிரான்சில்வேனியா ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நேற்று ருமேனியா வீராங்கனை ஜாக்குலின் கிறிஸ்டியன்(23வயது, 105வது ரேங்க்), ஸ்லோவேனியா வீராங்கனை காயா யுவான்(20வயது,98வது ரேங்க்) ஆகியோர் மோதினர். முதல் செட்டை காயா 6-3 என்ற புள்ளி கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். டை பிரேக்கர் வரை நீண்ட அடுத்த 2 செட்களையும்  7-6, 7-6 என்ற புள்ளி கணக்கில் ஜாக்குலின் போராடி கைப்பற்றினார். அதனால் 2 மணி 46 நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தை 2-1 என்ற செட் கணக்கில் வென்ற ஜாக்குலின் 2வது சுற்றுக்கு தகுதிப் பெற்றார்.

இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு(18வயது, 23வது ரேங்க்), ஸ்லோவேனியா வீராங்கனை போலோனா ஹெர்சோக்(30வயது, 124 ரேங்க்) ஆகியோர் மோதினர். சுமார் 2 மணி 27 நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தை எம்மா 4-6, 7-5, 6-1 என்ற செட் கணக்கில்  2வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு முதல் சுற்றில் எஸ்டோனியா வீராங்கனை(25வயது, 14வது ரேங்க்) ஒரு மணி 10 நிமிடங்களில் 6-3, 7-5 என நேர் செட்களில் செர்பியா வீராங்கனை அலெக்சாண்ட்ரா க்ருனிச்சை(29வயது, 44வது ரேங்க்) வீழ்ததி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories: