×

ஜேசன் ராய் அதிரடி ஆட்டத்தால் வங்கதேசத்தை வீழ்த்திய இங்கிலாந்து

அபுதாபி: ஐசிசி டி20 உலக கோப்பை சூப்பர்-12 பிரிவில்  20வது லீக் ஆட்டத்தில் முதல் பிரிவில் உள்ள வங்கதேசம், இங்கிலாந்து அணிகள் நேற்று அபுதாபியில் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் களமிறங்கியது. இங்கிலாந்து பந்து வீச்சை சமாளிக்க முடியாமல்  வங்கதேசம்  5.2ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 26ரன் எடுத்து இக்கட்டான நிலையில் இருந்தது. இடையில் வந்த முஷ்பிகுர் ரகீம் 29, கேப்டன் மகமதுல்லா 19, கடைசி நேரத்தில் நுருல் ஹசன் 16, நசிம் அகமது 19* ரன் எடுக்க ஸ்கோர் கொஞ்சம் உயர்ந்தது. இறுதியில் வங்கதேசம் 20ஓவருக்கு 9 விக்கெட்களை இழந்து 124ரன் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் டைமல் மில் 3, மொயீன் அலி, லிவிங்ஸ்டோன் தலா 2, கிறிஸ் வோக்ஸ் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 125 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து 14.1ஓவரில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 126ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரா வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய ஜேசன் ராய் 61(38பந்து, 5பவுண்டரி, 3 சிக்சர்), ஜோஸ் பட்லர் 18(18பந்து, 1பவுண்டரி, 1சிக்சர்), ஆட்டமிழக்காமல் டேவிட் மாலன் 28*(25பந்து, 3பவுண்டரி), ஜானி பேர்ஸ்டோ 8*(4பந்து, 1பவுண்டரி) ரன் எடுத்தனர். வங்கதேசம் தரப்பில் ஷோரிபுல் இஸ்லாம், நசிம் அகமது தலா ஒரு விக்கெட் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை  இங்கிலாந்து பிரகாசமாக்கி கொண்டுள்ளது.

Tags : England ,Bangladesh ,Jason Roy , England beat Bangladesh by Jason Roy in action
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா மரின்