மோடி பிரசாரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் பாட்னா குண்டுவெடிப்பு வழக்கில் 10 பேர் குற்றவாளி: என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

பாட்னா: பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது பாட்னா பிரசாரக் கூட்டத்தின் போது நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 10 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் 2013ம் ஆண்டு, அக். 27ல் நடந்த மோடி் பிரசாரக் கூட்டத்தில் மேடை அருகே தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. இவ்வழக்கில் 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. , இந்த வழக்கு என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி குருவீந்தர் மெக்ரோத்ரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, `புலனாய்வு அடிப்படையில் என்ஐஏ 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில், ஒருவர் சிறுவனாக இருப்பதால் அவருடைய வழக்கு சிறார் நீதிமன்ற ஆணையத்துக்கு மாற்றப்படுகிறது. மீதமுள்ள இம்தியாஸ், அன்சாரி, முஜிபுல்லா, ஹைதர் அலி, பிரோஸ் அஸ்லம், ஒமர் அன்சாரி, இப்திகார், அகமது உசைன், உமய்ர் சித்திக், அசாருதீன் ஆகிய 10 பேரும் குற்றவாளிகள் என்பது உறுதியாகி உள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் நவ. 1ம் தேதி அறிவிக்கப்படும்,’ என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

Related Stories: