×

இந்திய ஜனநாயனத்தை நசுக்க நடக்கும் முயற்சிகளுக்கு காங்கிரஸ் கண்டனம்: பெகாசஸ் விவகாரத்தை மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்: ராகுல்காந்தி பேட்டி..!!

டெல்லி: இந்திய ஜனநாயனத்தை நசுக்க நடக்கும் முயற்சிகளுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய உச்ச நீதிமன்றம், பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்துப் புலனாய்வு செய்ய சுயேச்சை விசாரணைக் குழுவை நியமித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஒருவர், அந்த விசாரணைக் குழுவுக்குத் தலைமையேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராகுல்காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது, அவர் பேசியதாவது பெகாசஸ் மென்பொருள் விவகாரத்தில் செல்போன் ஒட்டுக்கேட்பு குறித்து தாங்கள் கூறிய புகாருக்கு உச்சநீதிமன்ற உத்தரவு வலு சேர்த்துள்ளது. பெகாசஸ் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கூறிய பல கருத்துகளை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. உச்சநீதிமன்ற கண்காணிப்பில் நடைபெறும் விசாரணையில் உண்மை வெளிவரும் என்று நம்புகிறோம்.

இதனையடுத்து, பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்த உத்தரவிட்ட அதிகாரி யார் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். யாருக்கு எதிராக பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டது?, இந்திய மக்கள் பற்றிய தகவல்களை வேறு எந்த நாடாவது திரட்டி உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்திய ஜனநாயகத்தை சிதைக்கும் முயற்சியாகவே பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. பெகாசஸ் விவகாரத்தை விசாரிப்போம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருப்பது மிகப்பெரிய நடவடிக்கையாகும். பெகாசஸ் மென்பொருள் மூலம் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்ட பிரச்சனை குறித்த விவகாரங்களை மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த பாஜக நிச்சயம் விரும்பாது. தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று அவர் பேட்டியளித்துள்ளார்.

Tags : Pegasus ,Parliament ,Rakulkanti , Indian Democracy, Pegasus, Congress, Condemnation
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...