மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவுடன் தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்திப்பு

டெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவுடன் தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்துள்ளார். மருத்துவ தேவைகள், மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஆதாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார். 11 மருத்துவ கல்லூரிகளில் 1,650 இடங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். 2வது தவணை தடுப்பூசி செலுத்த 10 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: