×

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.யின் கோரிக்கை நிராகரிப்பு

சென்னை: ராஜேஷ் தாஸ் மீதான வழக்கு விசாரணையை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து மாற்ற முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராஜேஷ் தாஸ் மீதான வழக்கு விசாரணை தற்பொழுது விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென்று ராஜேஷ் தாஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மற்றும் செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டது இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது அப்பொழுது ராஜேஷ் தாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கை விசாரிக்க விழுப்புரம் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் பயணத்தின்போது நடைபெற்ற சம்பவம் என்பதால் கள்ளக்குறிச்சி மாவட்டம் அல்லது செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மேலும் வழக்கை கள்ளக்குறிச்சி அல்லது செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் உரிய சட்ட விதிகளுக்குட்பட்டதால் விழுப்புரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே வழக்கு விசாரணைக்கு எந்த தடையும் விதிக்க கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ராஜேஷ் தாசின் கோரிக்கையை நிராகரித்து மற்றும் அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு விசாரணையை மூன்று மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டுமென்ற காலக்கெடுவையும் உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் விதித்துள்ளார்.                                     


Tags : D. G. RB , Sexual harassment of female SP: Rejection of request by former Special DGP
× RELATED தமிழ்நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை...