சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து ஓ.பி.எஸ் தெரிவித்த கருத்தில் என்ன தவறு? ஜே.சி.டி பிரபாகர்

சென்னை: சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து ஓ.பி.எஸ் தெரிவித்த கருத்தில் என்ன தவறு? என்று ஜே.சி.டி பிரபாகர் வினவியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் கருத்தை விமர்சித்து கே.பி.முனுசாமி அளித்த பேட்டியால் தென் மாவட்டங்களில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக ஜே.சி.டி பிரபாகர் தெரிவித்துள்ளார். சசிகலா தொடர்பான ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு எழுந்த எதிர்ப்பால் அதிமுகவில் கோஷ்டி மோதல் மீண்டும் வெடித்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் கருத்தை விமர்சித்து கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் அளித்த பேட்டிக்கு ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராகவும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

Related Stories: