தேசிய கால்பந்து போட்டியில் தமிழக அணி சாம்பியன் ஓசூர் வீரர்களுக்கு ரயில் நிலையத்தில் வரவேற்பு

ஓசூர் : கோவாவில் யூத் நேஷனல் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டி கடந்த 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு, டெல்லி, ஆந்திரா, கர்நாடகா, மிசோரம், கேரளா உட்பட 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து கால்பந்து அணி வீரர்கள் பங்கேற்றனர். இதில் இறுதிப் போட்டிக்கு தமிழ்நாடு அணியும், மிசோரம் அணியும் தேர்வானது.

இந்த அணிகளுக்கு இடையே 23ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழக அணி வீரர்கள் வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றனர். இரண்டாவது இடத்தை மிசோரம் அணியும், மூன்றாவது இடத்தை கேரள அணியும் பிடித்தன. தமிழக அணியில் ஓசூரைச் சேர்ந்த ஜெய்சாந்த், ஜஸ்வந்த், அஸ்வந்த் ஆகிய 3 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். வீரர்கள் 3 பேரும் வெற்றிப்பதக்கத்துடன் நேற்று மாலை யஸ்வந்தபூர்-சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஓசூர் திரும்பினர். அவர்களுக்கு ஓசூர் ரயில் நிலையத்தில் கால்பந்தாட்ட பயிற்சியாளர் நாயர், ஓசூர் ரயில் நிலைய மேலாளர் குமரன், வீரர்களின் பெற்றோர், நண்பர்கள் ஆகியோர் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Related Stories:

More
>