திருவாரூர் மாவட்டத்தில் 1,540 பயனாளிகளுக்கு ரூ.26 கோடி வங்கி கடன்-கலெக்டர் வழங்கினார்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் ஆயிரத்து 540 பயனாளிகளுக்கு ரூ. 26 கோடி வங்கி கடனை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் வழங்கினார்.திருவாரூர் மாவட்ட வங்கியாளர் மற்றும் வாடிக்கையாளர் சந்திப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 1540 பயனாளிகளுக்கு ரூ.26 கோடியே 10 லட்சம் வங்கி கடனாக வழங்கி கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் கூறியதாவது, கொரோனா பேரிடர் மற்றும் விழாக்காலத்தினை முன்னிட்டு வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகளின் மூலம் வங்கிகளின் கடன் திட்டங்கள் சமூக பாதுகாப்பு திட்டமான பிரத மந்திரி ஜீவன் ஜோதி யோசனா, ஜீவன் சுரக்ஷா யோஜனா, அட்டல் பென்சன் யோசனா, செல்வ மகள் சேமிப்பு திட்டம் ஆகியவைகள் தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு விளக்கி கூறியிருக்கிறார்கள். மேலும், வாடிக்கையாளர் தங்கள் வாங்கும் கடன்களை தங்கள் முன்னேற்றத்திறக்காக நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி முதன்மை மேலாளர் எழிலரசன் மற்றும் வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>