புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்புக்கு நவம்பர் 8 முதல் பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி: புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்புக்கு நவம்பர் 8 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். வருகை பதிவேடு கிடையாது. சுய விருப்பத்தின் பேரில் மாணவர்களை பெற்றோர் பள்ளிகளுக்கு அனுப்பலாம். 1-8ஆம் வகுப்புக்கு பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படாது என்று பள்ளிக்கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். நகரில் காலை 9 முதல் மதியம் 1 மணி வரையும், கிராமங்களில் 9.30 மணி முதல் 1 மணி வரையும் பள்ளிகள் செயல்படும்.

Related Stories: