பாகிஸ்தான் வீரர்களை புகழந்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..காஷ்மீர் மாணவர்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்தது கல்லூரி நிர்வாகம்!!

ஜம்மு: உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டாடிய ஜம்மு காஷ்மீர் மருத்துவ மாணவர்கள் 3 பேரை ஆக்ரா கல்லூரி சஸ்பெண்ட் செய்துள்ளது.துபாயில் நடக்கும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் கடந்த 24ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது. காஷ்மீரின் ஸ்ரீநகரில், கரண் நகர் மற்றும் ஸ்கிம்ஸ் சவுரா ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் சிலர் இந்த வெற்றியை வெடி வெடித்து கொண்டாடினர்.இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்நிலையில், பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய மருத்துவ மாணவர்கள் மீது சட்ட விரோத தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.

அதே போல், உத்தரப்பிரதேசம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பிச்பூர் நகரில் உள்ள ராஜா பல்வந்த் சிங் பொறியியல் கல்லூரியில் பயிலும் காஷ்மீரைச் சேர்ந்த 3 மாணவர்கள், இந்திய அணியை வீழ்த்திய பாகிஸ்தானைப் புகழ்ந்தும், வீரர்களைப் புகழ்ந்தும் கோஷமிட்டனர்.இது தொடர்பாக வீடியோவும் வைரலானது. மேலும் அந்த மாணவர்கள் தங்களின் சமூக ஊடகக் கணக்கிலும், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிலும் பாகிஸ்தான் வீரர்களைப் புகழந்திருந்தனர்.இதையடுத்து, பாஜக இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் ஜகதீஸ்புரா காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகார் அடிப்படையில், போலீஸார் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவாக கோஷமிட்ட 3 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இதே போல், ஜம்முவின் சம்பா கிராமத்தில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய சிலர் சர்ச்சைக்குரிய வகையில் கோஷமிட்டனர். இந்த வீடியோ காட்சிகள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் 6 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More
>