மாநில கூட்டுறவு பயிற்சி நிலையத்தை ஏற்காட்டில் இருந்து மாற்றக்கூடாது: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மாநில அளவிலான புதிய கூட்டுறவு பயிற்சி நிலைய கட்டுமான பணிகளை நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில அளவிலான இப்பயிற்சி நிலையத்தில் ஏற்காட்டில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கு இந்த அரசு திட்டமிடுவதை அறிந்து, ஆத்தூர் ஆகிய தொகுதிகளை சேர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னையில், தலைமை செயலாளரிடம் இப்பயிற்சி நிலையம் தொடர்ந்து ஏற்காட்டிலேயே செயல்பட வேண்டும் என்று நேரடியாக மனு அளித்துள்ளனர்.

அவரும் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம்.மாநில கூட்டுறவு பயிற்சி நிலையத்தை ஏற்காட்டில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்தால், அதை எதிர்த்து சேலம் மாவட்ட மக்கள், சேலம் மாவட்ட அதிமுகவினர் இணைந்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

More