×

‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம்: எம்பி, எம்எல்ஏக்கள் ஆய்வு

வாலாஜாபாத்: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்ட துவக்க விழா வாலாஜாபாத் ஒன்றியம் அய்யம்பேட்டை அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் உமா தலைமை தாங்கினார். எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் சுந்தர், எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு மக்களை தேடி மருத்துவம் குறித்து பேசினார். மேலும், கிராமப்புற வீடுகளில் உள்நோயாளிகளாக உள்ளவர்களை கண்டறியும் கள பணியாளர்களுக்கான மருத்துவ பெட்டகத்தை வழங்கினர். தொடர்ந்து, அய்யம்பேட்டை கிராமத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள், முதியவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து வீட்டுக்கே சென்று சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர். மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நித்யா, மாவட்ட கவுன்சிலர் பொற்கொடி, ஒன்றிய கவுன்சிலர்கள் சேகர், எழிலரசி, அய்யம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் எம்மிஸ்ரல்லா, துணைத்தலைவர் கலைராணி உள்பட பலர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

உத்திரமேரூர் : உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தில் சுகாதாரத்துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் துவக்க விழா துவங்கியது. காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். எம்பி செல்வம், உத்திரமேரூர் ஒன்றியக்குழுத் பெருந்தலைவர் ஹேமலதா, துணைத் தலைவர் வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தொற்றா நோய்களுக்கான ஒருங்கிணைப்பாளர் எஷ்வந்த், வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் உமாதேவி ஆகியோர் வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் மானாம்பதி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பயனடையும் வகையில் மக்களை தேடி மருத்துவ நிகழ்ச்சியினை காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார். பின்னர் மக்களை தேடி மருத்துவம் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, மானாம்பதி கிராமத்தில் சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு ஊறுப்பினர்கள் சுகுணா, ருத்ரகோட்டி, ஊராட்சி மன்றத் தலைவர் ராதாநடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : ‘Medicine in Search of People’ Project: Study of MPs, MLAs
× RELATED விசேஷ நாட்கள், முகூர்த்த நாட்கள்...