ரூ.1.36 கோடி மோசடி வழக்கில் நடிகை ஷில்பா விடுவிப்பு

லக்னோ:பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் லோசிஸ் வெல்னஸ் சென்டர் என்ற பெயரில் நாடு முழுவதும் பிட்னஸ் சென்டர்களை திறந்தார். இதற்காக நாடு முழுவதும், பலரிடம் ஷில்பா ஷெட்டி பணம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், லக்னோவை சேர்ந்த ஜோத்ஜனா சவுகான், ரோஹித் வீர் சிங் ஆகியோர் நடிகை ஷில்பா ஷெட்டியிடம், கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக போலீசில் புகார் செய்துள்ளனர்.  இந்நிலையில், ஷில்பா ஷெட்டி, சுனந்தா ஆகியோரை எப்ஐஆரில் இருந்து போலீசார் நீக்கியுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், புகாரின் அடிப்படையில், ஷில்பா ஷெட்டி உட்பட பலர் மீது எப்ஐஆர் பதிவுசெய்யப்பட்டது. தற்போது விசாணைக்கு பிறகு ஷில்பா மற்றும் அவரது அம்மா பெயர் நீக்கப்பட்டது என்றனர்.

Related Stories: