பலாத்கார வழக்கில் காங். எம்எல்ஏ மகன் கைது: மத்திய பிரதேச போலீஸ் நடவடிக்கை

இந்தூர்: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏவின் மகன் கரண் மோர்வாலை பாலியல் பலாத்கார வழக்கில் போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டம் பத் நகரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ முரளி மோர்வாலின் மகன் கரண் மோர்வால் (30) என்பவர் மீது பாலியல் வழக்கு நிலுவையில் உள்ளது. அவர் தலைமறைவாக இருந்த நிலையில், இன்று ஷாஜாபூர் மாவட்டம் மக்சி நகருக்கு அருகே கரண் மோர்வாலை இந்தூர் உள்ள மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதி சர்மா கைது செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்த ஆண்டு ஏப். 2ம் தேதி கரண் மோர்வால் மீது இந்தூர் மகளிர் காவல் நிலைய போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்தனர்.

பெண் ஒருவரை திருமணம் செய்வதாக கூறி, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது கடந்த 19ம் தேதி வழக்குபதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவரின் தம்பி ஷிவாம் அளித்த தகவலின் பேரின், கரண் மோர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். ெதாடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார். ஆனால், சட்டமன்ற உறுப்பினர் முரளி மோர்வால், இந்த விவகாரம் குறித்து ஊடகங்களுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More