மாஜி முதல்வர் அமரீந்தர் சிங் நாளை புது கட்சி அறிவிப்பு?.. பஞ்சாப்பில் பரபரப்பு

சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் நாளை புது கட்சியை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கின் ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரால் வெளியிட்ட அறிவிப்பில், ‘கேப்டன் அமரீந்தர் சிங், நாளை (அக். 27) சண்டிகரில் செய்தியாளர் சந்திப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிகழ்வு அவரது பேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமரீந்தரின் ஆதரவு தலைவர்கள் கூறுகையில், ‘புதிய கட்சிக்கு பல பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ‘பஞ்சாப் விகாஸ் கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்படலாம். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக புதிய கட்சி தொடங்கப்படவுள்ளதால், வரும் தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டம் தீர்க்கப்பட்டால், பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுவோம்’ என்று கூறினர்.

Related Stories: