பாஜக ஆளும் கோவா முதல்வர் மீது ஊழல் புகார் குறித்து பிரதமரிடமே கூறியதால் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டேன் : மேகாலயா ஆளுநர் சர்ச்சை பேச்சு!!

கோவா : பாஜக ஆளும் கோவா முதல்வரை ஊழல்வாதி என விமர்சித்துள்ள மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக், பிரதமரிடம் புகார் அளித்த நிலையில், தாம் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டதாக கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், தற்போது மேகாலயா ஆளுநராக பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்து இருக்கும் நேர்காணலில், பாஜக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார். குறிப்பாக கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த்தை ஊழல்வாதி என விமர்சித்துள்ள அவர், கொரோனா பெருந்தொற்றை தவறாக கையாண்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவா மாநில அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஊழல் மிகுந்திருப்பதாகவும் குறிப்பாக கொரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்ட வீட்டுக்கு வீடு ரேஷன் பொருட்களை அளிக்கும் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகவும் கூறியுள்ளார். ரேஷன் பொருட்கள் ஊழல் குறித்து பிரதமரிடம் புகார் கூறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமே பிரதமர் விசாரணை மேற்கொண்டதாகவும் மாலிக் கூறியுள்ளார். ஆனால் புகார் கூறிய தன்னை ஆளுநர் பதவி இருந்து நீக்கிவிட்டு, ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான பிரமோத் சாவந்தை பதவியில் தொடர பாஜக அனுமதித்துள்ளதாகவும் சாடி உள்ளார்.

Related Stories: