×

‘பத்து ஆண்டா பராமரிப்பே இல்லை’ சிதிலமடைந்து கிடக்கும் செட்டியபட்டி சாலை-புதுப்பிக்க கோரிக்கை

சின்னாளபட்டி : திண்டுக்கல் செட்டியபட்டியில் சேதமடைந்த சாலையை புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல்  அடுத்த செட்டியபட்டி ஊராட்சியில் செட்டியபட்டி, எல்லைப்பட்டி,  நண்பர்புரம், கள்ளுப்பட்டி, கே.பி.டி.நகர், மகாத்மாகாந்திநகர்,  இளையாழ்வார்நகர் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடந்த 10  ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியின் போது கேபிடி நகர், ராஜீவ்காந்தி  நகரில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது.

அதன்பின் ஊராட்சி நிர்வாகம் முறையாக  பராமரிக்காததால் தற்ேபாது தார்ச்சாலை முழுவதும் சேதமடைந்துள்ளது. இதனால்  இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே கேபிடி நகர், ராஜீவ்காந்தி நகர்  சாலைகளை உடனே புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர்  ராஜாவிடம் கேட்ட போது, ‘தேசிய நான்கு வழிச்சாலையிலிருந்து கே.பி.டி.  நகருக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. வட்டார  வளர்ச்சி அலுவலர், திட்ட இயக்குநர் சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும்’ என்றார்.

Tags : Care ,Chettiapati road-in , Chinnalapatti: The people of Dindigul have demanded that the damaged road at Chettiyapatti be repaired.
× RELATED கோடை சீசன் நெருங்கியது: 35 ஆயிரம் தொட்டியில் மலர் நாற்றுகள் பராமரிப்பு