×

தோகைமலை அருகே கார், வீட்டில் போலீசார் அதிரடி சோதனை 802 கிலோ தடை செய்த புகையிலை பொருள் பறிமுதல்: 4 பேர் கைது

தோகைமலை : கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்டிமலை ஊராட்சி அழகாபுரி பகுதியில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள சில்லரை விற்பனை கடைகளுக்கு கடத்தி விற்பனை செய்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் வந்து உள்ளது. இதனை அடுத்து கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல் அப்பகுதியை ஆய்வு செய்ய உத்தரவிட்டதாக தெரிகிறது. அதன்பேரில் தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார். அப்பகுதியில் நேற்று முன்தினம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

அப்போது தோகைமலை திருச்சி மெயின் ரோட்டில் ஆர்டிமலை ஊராட்சி அழகாபுரி செல்லும் பிரிவு ரோட்டில் இருந்து ஒரு கார் வந்து உள்ளது. அந்த காரை நிறுத்தி ஆய்வு செய்ய முற்பட்டபோது காரில் அமர்ந்து இருந்த ஒரு வாலிபர் தப்பி ஓடி உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் இருந்தவர்களிடம் விசாரணை செய்தபோது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததாக தெரிகிறது.

இதில் சந்தேகம் அடைந்த போலீசார் காரை ஆய்வு செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பண்டல்களை கடத்தி சென்றது தெரியவந்து உள்ளது. இதனை அடுத்து காரில் இருந்தவர்களிடம் விசாரணை செய்தபோது திருச்சி லிங்கம் நகர் ஜாய் காலனியில் வசிக்கும் அயினான் மகன் பாண்டியன்(25), திருவெறும்பூர் பகுதி கீழகுறிச்சி தெற்கு தெருவை சேர்ந்த சேட்டு மகன் தமிழழகன்(28), இளஞ்செழியன்(31), திருச்சி கீழகல்கண்டார்கோட்டை அன்பில் நகர் முருகானந்தம் மகன் அமர்நாத்(25) ஆகியோர் சேர்ந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக காரில் கடத்தி சென்றதும், மேலும் பாண்டியன் என்பவரது வீட்டில் ஹான்ஸ் புகையிலை மூட்டைகளை பதுக்கி வைத்து உள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

இதனை அடுத்து பாண்டியன் வீட்டை ஆய்வு செய்த போலீசார் அங்கு பதுக்கி வைத்திருந்த ஹான்ஸ் புகையிலை மற்றும் காரில் இருந்த புகையிலை மூட்டைகளை 802 கிலோ பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய ஒரு கார், ஒரு லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்து தமிழழகன், இளஞ்செழியன், அமர்நாத் ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய பாண்டியனை போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோல் தோகைமலை செக்போஸ்டில் போலீசார் ஆய்வு பணியில் ஈடுபட்டு இருந்தபோது கடவூர் மைலம்பட்டியில் மளிகை கடை நடத்தி வரும் சாகுல் அமீது மகன் முகமது இஸ்மாயில்(39) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் தடைசெய்யப்பட்டு உள்ள ஹான்ஸ் பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து கொண்டு வந்து உள்ளார். அவர் வைத்து இருந்த ஹான்ஸ் பண்டலை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags : Tokaimalai , Tokaimalai: The Tamil Nadu government has banned tobacco and narcotics in the Ardimalai panchayat Alagapuri area near Tokaimalai in Karur district.
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு