குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயில் செயல்அலுவலர் அலுவலக கட்டிட சுற்றுச்சுவரில் விரிசல்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குளித்தலை : குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் சுற்றுப்புற வளாகத்தில் செயல் அலுவலர் குடியிருப்பு சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால் அதனை இடித்து விட்டு புதிதாக சுற்றுச்சுவர் கட்ட வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்டம் குளித்தலையில் கடம்பவனேஸ்வரர்கோயில் உள்ளது. காசிக்கு அடுத்து வடக்கு நோக்கி இருக்கும் சிவத்தலங்களில் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் கோயிலில் தரிசனம் செய்வது வழக்கம்.

விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொள்வார்கள். சிறப்பு வாய்ந்த கோயிலில் செயல்பட்டு வரும் செயல் அலுவலர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகத்தில் சுற்றுசுவர் பக்தர்கள் வெளிப்பிரகார நடைபாதை ஓரம் பழுதடைந்து எப்பொழுதும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

மேலும் தற்பொழுது மழைகாலம் என்பதால் எந்த நேரத்திலும் இடிந்து விழலாம். அதனால் தனியாக செல்லும் பக்தர்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். பக்தர்களின் நலன்கருதி இந்து சமயஅறநிலையத்துறை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைகாலங்களில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க செயல் அலுவலர் குடியிருப்பு வளாக சுற்றுச்சுவரை புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

More
>