வாலாஜா ரயில் நிலையத்தில் சோதனை ரயிலில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வாலாஜா :  வாலாஜா ரயில் நிலையத்தில் நடந்த சோதனையில் ரயிலில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.வாலாஜா வழியாக செல்லும் ரயிலில் வெளிமாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக ராணிப்பேட்டை பறக்கும் படை தாசில்தாருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. தாசில்தார் இளஞ்செழியன் மற்றும் போலீசார் வாலாஜா ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

இரவு 11 மணியளவில் சென்னையில் இருந்து ைமசூர் நோக்கிச்சென்ற காவிரி எக்ஸ்பிரஸில் சோதனையிட்டனர். அப்போது இருக்கையின் அடியில் பதுக்கி கடத்திய 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை தமிழ்நாடு உணவுப்பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைத்தனர். அரிசியை கடத்திய நபர்கள் யார்? என்பது குறித்து ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: