காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களின் நினைவிடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி!!!

ஸ்ரீநகர் : காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களின் நினைவிடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி செலுத்தினார். 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு - காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த பாதுகாப்பு படை வீரர்களின் வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில் துணை ராணுவ படையினர் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். வீரர்களின் நினைவாக புல்வாமாவில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 3 நாள் பயணமாக ஜம்மு - காஷ்மீர் சென்றுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை புல்வாமா நினைவிடத்திற்கு சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உள்துறை அமைச்சர்  அமித்ஷாவுடன் காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹாவும் பாதுகாப்புப் படையினரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இன்றுடன் தனது 3 நாள் காஷ்மீர் பயணத்தை நிறைவு செய்யும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிற்பகலில் டெல்லி திரும்புகிறார்.

Related Stories: