கிண்டி நட்சத்திர ஓட்டலில் போதையில் ரகளை 2 பெண்கள் கைது

ஆலந்தூர்: தேனாம்பேட்டையை சேர்ந்தவர் சவுமியா (35). அதே பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மீரா (32). ஆன்லைன் டிரேடிங் நடத்தி வருகிறார். தோழிகளான இவர்கள், நேற்று முன்தினம் இரவு கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்று, மது அருந்தினர். போதை தலைக்கேறிய நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதுகுறித்து ஒட்டல் மேலாளர் பரங்கிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில், அங்குவந்த போலீசார், போதையில் ரகளை செய்த 2 பெண்களையும் காவல் நிலையம் கொண்டு வந்தனர். இதையடுத்து பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து மீராவை கைது செய்தனர். சவுமியாவை தேனாம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: