×

ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டதால் ஒன்றிய அரசின் நிபுணர் குழு உ.பி. வருகை

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டதால், உயர்மட்ட நிபுணர் குழுவை அனுப்பி வைத்துள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் கொரோனா தொற்று குறையத் தொடங்கி இருப்பதாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். இந்நிலையில், அங்கு கான்பூரில் வசிக்கும் 57 வயதான நபருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதையடுத்து, சுகாதாரத் துறையின் மருத்துவத் துறை சார்ந்த உயர்மட்ட நிபுணர் குழுவை அனுப்பி வைத்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், `தேசிய நோய் தடுப்பு திட்டம், நோய் தடுப்புக்கான தேசிய மையத்தின் மகளிர் மருத்துவ நிபுணர்கள், பூச்சியியல் நிபுணர், பொது சுகாதார சிறப்பு நிபுணர், டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு மருத்துவ நிபுணர் குழு மாநில அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உதவ அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Tags : U.S. Government Expert Group ,U.P. , Zika Virus, Expert Panel
× RELATED ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் ரூ.401 கோடி நன்கொடை..!!