×

இந்திய கடற்படையின் 6 கப்பல்கள் இலங்கை வருகை

கொழும்பு: இந்தியா-இலங்கை இடையேயான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்திய கடற்படையின் 6 கப்பல்கள் இலங்கை துறைமுகத்தை வந்தடைந்தன. இந்திய கடற்படையின் முதல் பயிற்சி பிரிவில் உள்ள 6 கப்பல்கள், தெற்கு கட்டுப்பாட்டு மைய தலைமை அதிகாரி அட்மிரல் ஏகே. சாவ்லா தலைமையில், இலங்கைக்கு 4 நாள் பயிற்சி பயணம் மேற்கொண்டுள்ளன.

இவற்றில் மகர் மற்றும் சார்துல் கப்பல்கள் 101வது பயிற்சி பிரிவினருடன் கொழும்பு துறைமுகம் வந்தன. சுஜாதா, சுதர்ஷினி, தாரங்கினி மற்றும் விக்ரம் ஆகியவை 100வது பயிற்சி பிரிவினருடன் திரிகோணமலை வந்துள்ளன. இதன் மூலம், இருநாடுகளின் கடற்படைகளின் செயல்திறனை அதிகரிக்கும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இந்திய கடற்படை அளித்து வரும் பயிற்சியில், இம்முறை அதிகாரிகள் பயிற்சி பெற உள்ளனர்.

Tags : Indian Navy ,Sri Lanka , Indian Navy
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...