×

4.96 கோடியில் மாவட்ட கருவூல கட்டிடம்: கான்பரன்ஸ் மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 4.96 கோடியில் மாவட்ட கருவூல கட்டிடத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலிக்காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட கருவூல அலுவலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலிக்காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார்.

கலெக்டர் ஆர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட கருவூல அலுவலர் முத்து வரவேற்றார். 4.96 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கட்டிடத் திறப்பு விழாவில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி சிறுவேடல் செல்வம், எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், திட்ட இயக்குநர் தேவி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் படப்பை மனோகரன், திமுக மாவட்ட அவைத்தலைவர் சேகரன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார். சாலவாக்கம் குமார், சேகர், பூபாலன், நிர்வாகிகள் எம்.எஸ்.சுகுமார், தசரதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : 4.96 crore ,District Treasury Building ,Chief Minister , Chief Minister of Tamil Nadu MK Stalin
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...