சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளருக்கு போலீஸ் எஸ்பி எச்சரிக்கை

திருவள்ளூர்: மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் வெளியிட்ட அறிக்கை:  மாவட்டத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் பகல், இரவு நேரங்களில் அதிக அளவில் மாடுகள் சுற்றித்திரிவதால் வாகன விபத்து ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக நெடுஞ்சாலை ஓரங்களில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். மேலும், மாடுகளை பறிமுதல் செய்து கோசாலையில் ஒப்படைக்கப்படும்.

கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் மூலமாக 35 விபத்துகள் ஏற்பட்டு 17 பேர் உயிரிழந்துள்ளனர். சாலையில் திரியும் கால்நடைகளை குறித்து வாட்ஸ்அப் எண் - 6379904848 மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

Related Stories:

More