×

பிரதமர் மோடி ஆட்சியில் 157 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது!: ஒன்றிய சுகாதாரத்துறை விளக்கம்

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இதுவரை 157 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. தனியார் அல்லது அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளதாகவும், அடித்தட்டு மக்களை கொண்ட மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய சுகாதாரத்துறை கூறியுள்ளது. 2014ம் ஆண்டில் இருந்து இதுவரை அனுமதி அளிக்கப்பட்டுள்ள 157 கல்லூரிகளில் 63 கல்லூரிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டதாக அத்துறை தெரிவித்துள்ளது.

இந்த 157 கல்லூரிகள் மூலம் கூடுதலாக சுமார் 16 ஆயிரம் எம்.பி.பி.எஸ். சீட்கள் கிடைக்கும் என்றும் இதுவரை பயன்பாட்டுக்கு வந்துள்ள கல்லூரிகள் மூலம் 6,500 இருக்கைகள் செயல்பாட்டுக்கு வந்திருப்பதாகவும் ஒன்றிய சுகாதாரத்துறை கூறுகிறது. இந்த மருத்துவ கல்லூரி திட்டத்தில் 17 ஆயிரத்து 691 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Tags : PM Modi ,Union Health Department , Modi regime, Medical College, Union Health Department
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...