×

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வரி கொள்ளை: ராகுல் ஆவேசம்

புதுடெல்லி: பெட்ரோல் விலை 5வது நாளாக தொடர்ந்து உயர்த்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், இதை ‘வரி கொள்ளை’ என்று விமர்சித்துள்ளார். ெபட்ரோல், டீசல் விலை கடந்த 5  நாட்களாக தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ரூ.35 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலைகள் இந்த ஆண்டு மட்டும் தலா ரூ.23.53 உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டரில், ‘பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களுக்கு தொல்லை கொடுப்பதில் மோடி அரசு சாதனை படைத்துள்ளது.

 இந்த ஆண்டு மட்டும் 23.53 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. அரசு சொத்துகள் விற்கப்படுகின்றன. அதே போன்று பெட்ரோல் விலை உயர்வும் கடுமையாக அதிகரித்துள்ளது,’ என குறிப்பிட்டுள்ளார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் தனது டிவிட்டரில், ‘வரி பறிப்பு’ என்று ஹேஷ் டேக்குடன் ‘பெட்ரோல் விலையை உயர்த்தி வரி கொள்ளை நடக்கிறது. எந்த மாநிலத்துக்காவது தேர்தல் நடந்தால் இதற்கு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும்’ என்று விமர்சித்துள்ளார்.

Tags : Rahul , Petrol, diesel, tax robbery, Rahul
× RELATED யாரும் ஓட்டு போட கூடாது; ராகுல்...