×

பாலிவுட் சீனியர் நடிகை மினு மும்தாஜ் காலமானார்

மும்பை: பாலிவுட் சீனியர் நடிகை மினு மும்தாஜ் (79), கடந்த 1950 மற்றும் 1960களில் இந்தி படங்களில் நடித்தது மட்டுமின்றி, பல படங்களில் நடனம் ஆடியுள்ளார். ‘முகல் ஏ ஆசம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஜப் ராத் ஹே ஹைசி மத்வாலி’ என்ற பாடல் காட்சியில் அவரது நடனம் பரபரப்பாக பேசப்பட்டது. தவிர, ‘நயா தவுர்’ படத்தில் இடம்பெற்ற ‘ரேஷ்மி சல்வார் குர்தா ஜலிகா’ என்ற பாடல் உள்பட பல படங்களில் அவரது நடனத்துக்கு வரவேற்பு கிடைத்தது. பழம்பெரும் பாலிவுட் காமெடி நடிகர் மெஹமூத் சகோதரியான மினு மும்தாஜ், கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் வசித்து வந்தார். மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக கேன்சருக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு காலமானார். அவருக்கு கணவர் அலி அக்பர், ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர்.

Tags : Minu Mumtaz , Bollywood, senior actress, Minu Mumtaz, has passed away
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...