×

கங்கை நதி நீரின் தரம் ‘சும்மா கும்’: ஆக்சிஜன் அளவு அதிகரிப்பு

புதுடெல்லி: கடந்த 2014ம் ஆண்டில் இருந்தை விட கங்கை நதி நீரின் தரம் தற்போது மேம்பட்டுள்ளதாக, ‘கங்கை தூய்மை திட்டம்’ இயக்குனர் ஜெனரல் ராஜீவ் ரஞ்சன் மிஸ்ரா கூறியுள்ளார். இது குறித்து கங்கை தூய்மை திட்டத்தின் இயக்குனர் ராஜீவ் ரஞ்சன் மிஸ்ரா கூறியதாவது: கங்கை நதி நீரின் தரம் மேம்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு நதியின் 53 கண்காணிப்பு இடங்களில் 32 இடங்களில் ஆய்வு மேற்கொண்ட போது உயிர்களுக்கு தேவையான ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்தது. ஆனால், 2021ல் 97 கண்காணிப்பு இடங்களில் 68 இடங்களில் மேற்கொண்ட ஆய்வில், உயிரிகளுக்கு தேவையான ஆக்சிஜன் தண்ணீரில் அதிகம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. நதி முழுவதும் தண்ணீரில் ஆக்சிஜன் அளவு அதிகரித்துள்ளது.

கங்கையின் பிரதான நீரோட்ட பகுதியில் அமைந்துள்ள  தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்தியது, குப்பை சேகரிப்பு நிலையம் ஏற்படுத்தியது, கரைகளில் மேற்கொண்ட திடக்கழிவு மேலாண்மை போன்ற நடவடிக்கையால் கங்கை நதி நீரின் தரம் மேம்பட்டுள்ளது. இதனால், உத்தரகாண்ட் முதல் ஹரித்துவார் வரை ‘ஏ’ பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால், கங்கை கரையின் முழு நீளத்தில் 351 இடங்களில் மாசு ஏற்படுகிறது என்று அடையாளம் காணப்பட்டது. தற்போது, அது குறைக்கப்பட்டுள்ளது. கங்கையை தூய்மைப்படுத்துவது ஒரு தொடர் நடவடிக்கை. இதற்கான முயற்சியில் நல்ல முடிவுகள் கிடைத்து வருகின்றன என்றார்.

Tags : Ganges , Ganges river, quality, oxygen, increase
× RELATED காவிரியாய் – காலாறாய் – கழியுமாகி