×

சேலம் ஆத்தூர் அருகே கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருந்தாளுநர்: மருத்துவமனைக்கு சீல் வைப்பு

கெங்கவல்லி: சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த தாண்டவராயபுரம் ஊராட்சியில் போலி மருத்துவர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக ஆத்தூர் தாசில்தாருக்கு புகார் வந்தது. இதையடுத்து  தாசில்தார் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அங்கு கொரோனா பாதித்த பெண் உள்பட 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனை நடத்தி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சேலம் அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராக பணியாற்றி ஓய்வு பெற்ற வரதராஜன்(65) என்பதுதெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த கொரோனா நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள், மருத்துவமனையை  பூட்டி சீல் வைத்தனர்.கொடைக்கானலில் போலி டாக்டர்கள் கைதுதிண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பூம்பாறை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மனைவி மோகினி (56), குண்டுபட்டியைச் சேர்ந்த டென்சிங் (64) ஆகியோர் ஆங்கில மருத்துவம் படிக்காமல் மலைவாழ் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவது சுகாதாரத்துறையினருக்கு தெரிய வந்தது. இதையடுத்து கொடைக்கானல் போலீசார், இருவரையும் நேற்று கைது செய்தனர். டென்சிங்கிடம் சிகிச்சை பெற்ற மலைவாழ் மக்கள் பலர் இறந்ததாக கூறப்படுகிறது. இது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post சேலம் ஆத்தூர் அருகே கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருந்தாளுநர்: மருத்துவமனைக்கு சீல் வைப்பு appeared first on Dinakaran.

Tags : Salem Athur ,Kengavalli ,Salem district ,Athur ,Thandavarayapuram Panchayat ,
× RELATED பட்டாசு ஆலையில் வெடி விபத்து தொழிலாளி பலி