தலைமை செயலகத்தில் ஐநா சபை கொடி

சென்னை: ஐக்கிய நாடுகள் தினத்தை முன்னிட்டு, தலைமை செயலகத்தில் நேற்று இந்திய தேசிய கொடியுடன் ஐக்கிய நாடுகள் சபையின் கொடியும் ஏற்றப்பட்டது. ஐக்கிய நாடுகள் தினம் 1948ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. ஐநா அமைப்பின் முக்கிய மற்றும் நிரந்தர அமைப்பாக பொதுச்சபை உள்ளது. முக்கிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள பொதுச்சபைக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளது.

உலக நாடுகளில் அமைதியை நிலைநாட்டவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தவும் பாதுகாப்பு மன்றம் வழிவகுக்கிறது. பல கிளை அமைப்புகளுடன் சர்வதேச நாடுகளின் பாதுகாவலனாக விளங்கி வருகிறது. இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை தன்னுடைய 76வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில்,  ஐக்கிய நாடுகள் தினத்தை முன்னிட்டு இந்திய தேசிய கொடியுடன், ஐக்கிய நாடுகள் சபையின் கொடியும் நேற்று ஏற்றப்பட்டது.

Related Stories:

More
>