விழுப்புரம் எஸ்பி ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போதை வாலிபர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் எஸ்பி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் எஸ்பி அலுவலக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு, ஒரு நபர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, எஸ்பி அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், 10 நிமிடங்களில் வெடித்துவிடும் என்றும் மிரட்டல் விடுத்துவிட்டு போனைத் துண்டித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் எஸ்பி நாதாவுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கிடங்களைச் சேர்ந்த முருகன் மகன் அஜய் (23) என்பது தெரியவந்தது. இவர் மீது திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் குடிபோதையில் மிரட்டல் விடுத்தது  தெரியவந்தது.

Related Stories: