×

ஜெயலலிதா கார் டிரைவர் மர்ம சாவை விசாரித்த இன்ஸ்பெக்டர், பிரேத பரிசோதனை டாக்டர்களிடம் விசாரணை: கொடநாடு வழக்கு தனிப்படை தீவிரம்

ஆத்தூர்: ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் மர்மச்சாவு குறித்த விசாரணை  மீண்டும் தொடங்கியுள்ளது. விபத்து வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர், பிரேத பரிசோதனை செய்த டாக்டர்களிடம் விசாரணை நடத்த கொடநாடு வழக்கு தனிப்படையினர் முடிவு செய்துள்ளனர்.  கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் சேலத்தை சேர்ந்த கனகராஜ் மர்ம சாவு குறித்து மீண்டும் விசாரிக்க சேலம் மாவட்ட எஸ்.பி. அபிநவ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கனகராஜ் சாவு தொடர்பான மறு விசாரணை கடந்த 22ம் தேதி  தொடங்கியது.

20க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் ஆத்தூருக்கு சென்று, சக்தி நகரில் வசிக்கும் கனகராஜ் உறவினர் ரமேஷ் மற்றும் அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் கனகராஜ் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர்.  கனகராஜ் ஓட்டிச்சென்ற பைக்கின் உரிமையாளரிடமும் விசாரணை நடத்தினர். பைக் மீது மோதிய கார்  டிரைவரிடம் தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, இந்த வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த ஆத்தூர் இன்ஸ்பெக்டர், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களிடமும் விசாரிக்க தனிப்படையினர் முடிவு செய்துள்ளனர். விரைவில் விசாரணை நடத்தப்படும் என தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

Tags : Jayalalithaa ,Kodanadu , Jayalalithaa, Car Driver, Inspector, Autopsy Doctor, Investigation, Kodanadu, Personal
× RELATED சூடுபிடிக்கும் கோடநாடு வழக்கு: 8-வது...