2 நாட்கள் நடைபெற்ற பொதுக்குழுவில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில புதிய நிர்வாகிகள் தேர்தல்: நெல்லை முபாரக் மீண்டும் தலைவராக தேர்வு

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் புதிய தலைவராக, மீண்டும் நெல்லை முபாரக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில பொதுக்குழு கூட்டம் 2 நாட்கள் நடந்தது. பொதுக்குழுவுக்கு எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் வரவேற்றார். மாநில செயலாளர் அகமது நவவி  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் ஆண்டறிக்கையையும், மாநில பொருளாளர் வி.எம்.அபுதாஹிர் கட்சியின் நிதி அறிக்கையையும் தாக்கல் செய்தனர். நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி அகில இந்திய தலைவர் எம்.கே.பைஸி, துணை தலைவர் தெகலான் பாகவி, பொதுச்செயலாளர் அப்துல் மஜீத், தேசிய செயற்குழு உறுப்பினர் அப்துல் மஜீத் பைஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ.கட்சியின், அடுத்த 3 ஆண்டுக்கான புதிய மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. தேர்தலை தேசிய பொதுச்செயலாளர் அப்துல் மஜீத் நடத்தினார். துணை தேர்தல் அதிகாரியாக கேரள மாநில முன்னாள் தலைவர் அப்துல் மஜீத் ஃபைஸி செயல்பட்டார். இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் புதிய தமிழ் மாநில தலைவராக நெல்லை முபாரக் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை தலைவர்-எஸ்.எம்.ரஃபீக் அகமது, பி.அப்துல் ஹமீது,  பொதுச்செயலாளர்- எம்.நிஜாம் முகைதீன், அச.உமர் பாரூக், எஸ்.அகமது நவவி, பொருளாளர்-எஸ்.அமீர் ஹம்சா, செயலாளர்-டி.ரத்தினம், அபுபக்கர் சித்திக், ஏ.கே.கரீம், நஜ்மா பேகம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநில செயற்குழு உறுப்பினர்கள்- அம்ஜத் பாஷா, வி.எம்.அபுதாஹிர், பஷீர் சுல்தான், வழ.ராஜா முகமது, ஷஃபிக் அகமது, சுல்ஃபிகர் அலி, வழ.சஃபியா, ஃபயாஸ் அகமது, ஹஸ்ஸான் இமாம், டாக்டர். ஜமிலுன் நிஷா, முஜிபுர் ரஹ்மான், ராஜா ஹூசைன். தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள்-டாக்டர் சேக் மீரான், அப்துல் சத்தார், ஜாபர் அலி உஸ்மானி, நூர் ஜியாவுதீன், ஜியாவுதீன், அபுபக்கர் சித்திக், முபாரக், புரோஜ், டாக்டர் ரபீக், அஸ்கர், ஆதம், அசாருதீன், முஸ்தபா, லுக்மான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Related Stories:

More
>