×

தீபாவளிக்கு 50 டன் ஆவின் இனிப்பு விற்க இலக்கு: பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தகவல்

சென்னை:  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 50 டன் ஆவின் இனிப்புகள் விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி  சா.மு.நாசர் கூறினார்.  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 3.07 கோடி மதிப்பில், புதிய தாலுகா அலுவலகத்துக்கு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்  நேற்று அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர், ‘‘தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுத்தமான நெய், பால் மூலம் தயார் செய்யப்பட்ட இனிப்புகள், விற்பனை செய்ய உள்ளோம். அதிமுக ஆட்சியின்போது, 18 டன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 50 டன் ஆவின் இனிப்புகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆவின் பொருட்களை வீடுகளுக்கே நேரடியாக கொண்டு சென்று விநியோகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்காக தீபாவளிக்கு 1 லட்சத்து 36 ஆயிரம் அரை கிலோ பாக்கெட்டாக இனிப்புகள் கேட்டுள்ளனர். இவ்வாறு அமைச்சர் ஆவடி நாசர் கூறினார்.

Tags : Avin ,Deepavali ,Samu Nasser , Minister of Dairy, S. M. Nasser, Information
× RELATED சென்னையின் பல்வேறு பகுதிகளில் பால்...