கஞ்சா கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை..!

சென்னை: சென்னை போர் நினைவுச்சின்னம் அருகே நடைபெற்ற மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் பண்டிகை காலம் என்பதால் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது; மக்கள் கூடும் இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காவல்துறை கண்காணித்து வருகிறது. Face Detection மூலம் 7,000-க்கும் மேற்பட்ட திருடர்களை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கஞ்சா கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா கடத்தியதற்காக 179 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார். சென்னை சாந்தோமில் நடைபெற்ற மார்பக புற்றுநோய்  விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை  இயக்குநர் கிருத்திகா உதயநிதி துவக்கி வைத்தார். நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம் பங்கேற்றார். பின்னர் பேசிய கிருத்திகா உதயநிதி; மார்பக புற்றுநோயால் மரணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

விழிப்புணர்வு இருந்தாலே அச்சப்பட தேவையில்லை. குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கும் போதிய விழிப்புணர்வு தேவை என கூறினார்.

Related Stories: