ஆடி கியூ 5

ஆடி  நிறுவனம், கடுமையான மாசு கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து,  கியூ5 எஸ்யுவி உற்பத்தியை ஓராண்டு முன்பு நிறுத்தியது. இந்நிலையில், புதிய பிஎஸ்6 தர நிலையிலான இன்ஜினுடன் புதிய காரை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம் இந்தியாவில் சந்தைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார், குவாட்ரோ ஆல்-வீல் டிரைவுடன் உள்ளது. புதிய அம்சங்களாக 48.26 செமீ (ஆர்19) 5 டபுள்-ஸ்போக் ஸ்டார் ஸ்டைல் அலாய் வீல்கள், ஆடி பார்க் அசிஸ்ட், சென்சார் கட்டுப்பாட்டுடன் கூடிய பூட்-லிட் ஆபரேஷனுடன் கம்போர்ட் கீ, பி&ஓ பிரீமியம் 3டி சவுண்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேம்பட்ட வெளிப்புற வடிவமைப்புடன் வருகிறது. முழு விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், ₹2 லட்சம் செலுத்தி இந்த காருக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Stories: