கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற டாஸ்மாக் மேலாளர் ஊழியர் சஸ்பெண்ட்

சென்னை: சின்ன மாத்தூர்  ஆம்ஸ்ட்ராங் நகரில் செயல்படும் டாஸ்மாக் கடையில், கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்ததால், குடிமகன்கள் விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து தமிழ்நாடு வாணிப கழக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணை ஆட்சியர் சுமதி, சம்மந்தப்பட்ட கடை ஊழியர்களான லட்சுமணன் மற்றும் மேலாளர் சேகர் ஆகிய இருவரையும்  நேரில் அழைத்து விசாரித்தார்.

அதில், மதுபாட்டில்களுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட ₹10 கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது.

இதையடுத்து டாஸ்மாக் கடை மேலாளர் சேகர் மற்றும் ஊழியர் லட்சுமணன் ஆகிய இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து துணை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்கப்பட்டாலோ  அல்லது கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: