துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய 470 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ்  விமானம் நேற்று சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த 138 பயணிகளும் விமானத்தை விட்டு இறங்கி சென்றனர். அந்த விமானம் சென்னையில் இருந்து மீண்டும் ஐதராபாத்துக்கு உள்நாட்டு விமானமாக புறப்பட்டு செல்ல வேண்டும். இதற்காக, விமான நிலைய ஊழியர்கள், அந்த விமானத்திற்குள் ஏறி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு சீட்டு மட்டும் தூக்கிக் கொண்டிருந்தது. அதை சரி செய்ய முயன்றனர். ஆனால் அந்த சீட்டுக்கு அடியில் ஏதோ இருப்பது தெரிந்தது. உடனே சீட்டை தூக்கி பார்த்தபோது, வெள்ளை நிறத்தில் 2 பார்சல்கள் இருந்தன. தகவலறிந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பார்சல்களை பிரித்து பார்த்தனர். அதில் 470 கிராம் தங்க கட்டிகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ரூ.23 லட்சம். அதனை மீட்டு சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

துபாயில் இருந்து கடத்தி வந்த தங்கக்கட்டிகளை கடத்தல் ஆசாமி விமான சீட்டிற்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு இறங்கிச் சென்றது தெரியவந்தது. அந்த சீட்டில் பயணம் செய்த பயணி யார் என சுங்கத்துறையினர் தீவிரமாக விசாரிக்கின்றனர். மேலும், விமானத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories:

More
>