பர்கூர் மலைப்பாதையில் 10 இடங்களில் நிலச்சரிவு: வாகன போக்குவரத்துக்கு முற்றிலும் தடை

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மலை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று 2வது நாளாக அந்தியூரில் இருந்து வரட்டுப்பள்ளம், தாமரைக்கரை, பர்கூர், தட்டக்கரை, கர்கேகண்டி செல்லும் மலைப் பாதையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனை சரி செய்யும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக ரோடுகளில் பல இடங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பெரிய பாறைகள் ரோட்டின் ஓரங்களில் கிடப்பதால் வாகனங்கள் எதுவும் தற்போது செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் தமிழகம் -கர்நாடம்ா இடையே மலைப்பாதையில் அனைத்து போக்குவரத்திற்கும் நேற்று முற்றிலும் தடை விதிக்கப்பட்டது.

Related Stories:

More
>