அரசு புறம்போக்கு நிலத்தில் நடிகர் மன்சூர் அலிகான் கட்டிய வீட்டுக்கு சீல்: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை:  சென்னை, சூளைமேடு பெரியார் பாதை  மேற்கில் நடிகர் மன்சூர் அலிகான் வீடு உள்ளது. 18  ஆண்டுகளுக்கு முன் 2,400 சதுர அடி நிலத்தை அப்பாவு மற்றும் அவரது மகன் பாரி  ஆகியோர், தன்னிடம் விற்றனர். பிறகு அது அரசு புறம்போக்கு நிலம்  என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து 2019ம் ஆண்டு நிலத்தை தன்னிடம் விற்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் புகார்  அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று  வந்தது. மன்சூர் அலிகான் 2019ல் நீதிமன்றத்தில் வழக்கும்  தொடர்ந்தார். இதை அப்போதே நீதிமன்றம் தள்ளுபடி ெசய்தது. மேலும், புறம்போக்கு நிலத்தை  மீட்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில்  புறம்போக்கு நிலத்தை மீட்க சொல்லிய நீதிமன்ற உத்தரவின் பேரில் மண்டலம் 8, கோட்டம்  105, மாநகராட்சி அதிகாரிகளால் திடீரென நேற்று காலை சூளைமேடு, பெரியார்  பாதையில் உள்ள நடிகர் மன்சூர் அலிகான் வீட்டிற்கு சென்று கதவை பூட்டி சீல்  வைத்து நோட்டீஸ் ஒட்டி விட்டு சென்றனர்.

Related Stories: