×

பாதுகாப்பு சூழல் குறித்து ஜம்மு காஷ்மீரில் அமித்ஷா ஆய்வு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக உள்ளூர் மக்கள், இந்துக்கள்  மீதும், வெளிமாநிலங்களில் இருந்து வந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 11 பேரை கொன்றுள்ளனர்.   இதனால் அங்கு பதற்்்றம் ஏற்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், ஜம்முகாஷ்மீரின் பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு செய்வதற்காக, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று 3 நாள் பயணமாக இங்கு வந்தார்.

ஆளுநர் மாளிகையில் நடந்த கூட்டத்தில் கவர்னர் மனோஜ் சின்கா, ராணுவம், சிஆர்பிஎப், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இதில், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழிக்கவும், ஊடுருவலை தடுப்பதற்காகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமித்ஷா கேட்டறிந்தார். தொடர்ந்து, தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பர்வேஸ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்த ஆய்வாளரின் மனைவிக்கு அரசு வேலைக்கான உத்தரவையும் அப்போது அவர் வழங்கினார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப் பிரிவை ஒன்றிய அரசு 2 ஆண்டுகளுக்கு முன் ரத்து செய்து, இம்மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. அதன் பிறகு, முதல் முறையாக இப்போதுதான் ஜம்மு காஷ்மீருக்கு அமித்ஷா சென்றுள்ளார்.

பலத்த பாதுகாப்பு
அமித்ஷாவுக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால், ஜம்மு காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் தங்கியுள்ள ஆளுநர் மாளிகையை சுற்றி 20 கிமீ தூரம், பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

Tags : Amit Shah ,Jammu and ,Kashmir , Security Environment, Jammu, Amitsha, Study
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...