அம்மா உணவகத்தை அதிமுக ஆட்சியை விட சிறப்பாக நடத்த வேண்டும்: முதல்வருக்கு கமல்ஹாசன் கோரிக்கை

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: திமுக அரசு், அம்மா உணவகங்களை கைவிடும் எண்ணமில்லை என அறிவித்திருந்தது. உணவு, மனிதர்களின் அடிப்படை உயிர் ஆதார விசைகளில் ஒன்றாக இருக்கும்போது, அதை குறைந்த விலையில் தரும் திட்டத்திற்கு செலவு செய்ய அரசு அமைப்புகள் தயங்கவே கூடாது.

அம்மா உணவகத் திட்டம், பெயர் மாற்றப்படாமலேயே சிறப்பாகத் தொடரும் என்று முதல்வர் உறுதிமொழி அளித்திருந்தார். ஏழை எளியவர்களின் பசியாற்றும் இந்த திட்டத்தை, முந்தைய ஆட்சியாளர்களைவிட சிறப்பாக செயல்படுத்துவதே அரசுக்கு பெருமை தருவதாக இருக்க முடியும். அம்மா உணவகம் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் சிறப்பாக செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories:

More
>