ஊட்டி கோ ஆப்டெக்சில் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கம்

ஊட்டி:  ஊட்டியில் உள்ள கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி கலந்துக் கொண்டு முதல் விற்பனையை துவக்கி வைத்து பேசியதாவது: தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ ஆப்டெக்ஸ் கடந்த 86 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள் முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக சந்தைப்படுத்தி வருகிறது.

 கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் பட்டு ரக உற்பத்தியில் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகிறது. காஞ்சிபுரம், சேலம், கோவை, ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பட்டுச் சேலைகள் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் காலத்திற்கேற்ற புதிய வடிவமைப்பான மென்பட்டு சேலைகளையும் கோ ஆப்டெக்ஸ் அறிமுதகப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு தீபாளவளியை முன்னிட்டு கைத்தறி ரங்களுக்கு 30 சதவீதம் அரசு சிறப்புத் தள்ளுபடி வழங்குகிறது.

இம்முறை பட்டு, பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், சட்டைகள், மகளிர் விரும்பும் சுடிதார் ரங்கள், ஆர்கானிக் பருத்தி சேலைகள், ஏற்றுதி தரம் வாய்ந்த ஹோம் பர்னிசிங் ரங்கள் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு ஊட்டி கோ ஆப்டெக்ஸ் நிலையம் மூலம் ரூ.53 லட்சத்து 93 ஆயிரத்திற்கு ஆடைகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.1 கோடியே 40 லட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என்றார். இந்நிகழ்ச்சியில் கோ ஆப்டெக்ஸ் தலைவர் வெங்கடாஜலம் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

Related Stories:

More
>