சூரியன் எப்எம்மின் பரிசளிப்பு விழா

மதுரை: சூரியன் எப்எம்-மின் 14ம் ஆண்டுவிழா கொண்டாட்ட போட்டியில் கலந்து கொண்டு வென்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று மதுரையில் நடந்தது. சன் குழுமத்தின் ஓர் அங்கமான சூரியன் எப்எம் மதுரையிலிருந்து தனது ஒலிபரப்பை கடந்த 14 ஆண்டுகளாக வழங்கி வருகிறது. மக்களின் மனம் கவரும் பாடல்களோடு, பயனுள்ள தகவல்களோடு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கி நகரின் முதல் தர வானொலியாக வலம் வருகிறது.

இதன் 14ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, நேயர்கள் பங்கேற்கும் போட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஒவ்வொரு மணி நேரமும் நிகழ்ச்சிகளின் இடையே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதிலை சூரியன் எப்எம்-மின் வாட்ஸ் அப் எண்ணான ‘91599 35935’க்கு ஏராளமான நேயர்கள் அனுப்பி வைத்தனர். ஒவ்வொரு மணி நேரமும் அனுப்பியவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.

அதே போல அன்றைய நாள் முழுவதும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில்களை அனுப்பியவர்களில் ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ராம.சுப்ரமணியன் என்ற நேயருக்கு பம்பர் பரிசாக எல்இடி டிவி வழங்கப்பட்டது. இந்த பரிசளிப்பு விழா நேற்று மதுரையில் உள்ள சூரியன் எப்எம் அலுவலக அரங்கில் நடைபெற்றது. பரிசுகளை சூரியன் எப்எம் மற்றும் தினகரன் நாளிதழில் நியூமராலஜி தகவல்களை வழங்கும் எண்கணித ஜோதிடர் காரைக்குடி ஜெ.என்.எஸ்.செல்வன் வழங்க, வெற்றி பெற்றவர்கள் பெற்றுக் கொண்டனர். பரிசளிப்பு விழாவின் போது சூரியன் எப்எம்மின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், ஊழியர்கள் உடனிருந்தனர்.

Related Stories:

More
>