ரெய்டை எதிர்கொள்வதில் நாங்கள் டபுள் டாக்டரேட்: சொல்கிறார் செல்லூர் ராஜூ

மதுரை: மதுரை மாநகர் மாவட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செல்லூர் ராஜூ தலைமை வகித்தார். கூட்டத்திற்கு பின் அவர் கூறியதாவது: வரும் 24ம் தேதி மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு ஓபிஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

அதேபோன்று 30ம் தேதி பசும்பொன் செல்லும் முன் கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனைகள் குறித்து அதிமுகவினர் கவலைப்படவில்லை. நாங்கள் எல்கேஜி படிக்கும் போதே இவற்றை சந்தித்து, இதனை எதிர்கொள்வதில் டபுள் டாக்டரேட் முடித்து விட்டோம் என்றார்.

Related Stories: